Advertisment

ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி; போராடித் தோற்றது இந்தியா!

indian women hockey team

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாகப் பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பி.வி.சிந்து வெண்கலம் வென்றுள்ளார். மேலும், பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியா சார்பாகப் பங்கேற்ற அசாமின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றுள்ளார்.

Advertisment

மேலும், இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் மேலுமொரு வெள்ளி அல்லது தங்கம் உறுதியாகியுள்ளது. இதற்கிடையே மகளிருக்கான ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி, உலகின் இரண்டாம் நிலை அணியான அர்ஜெண்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் போராடித் தோல்வியடைந்துள்ளது.

Advertisment

இந்த போட்டியில் தோற்றாலும் வெண்கலம் வெல்ல இந்திய மகளிர் அணிக்கு வாய்ப்புள்ளது. வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் வரும் ஆறாம் தேதி இந்தியா, பிரிட்டன் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

tokyo olympics Indian hockey team
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe