இளம் வீரர்களுடன் இலங்கையுடன் மோதும் இந்திய கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியீடு!

india vs srilanka

இந்தியகிரிக்கெட் அணி, தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட இங்கிலாந்துசென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கிடையே ஜூலை மாதம், இலங்கைக்கு எதிராக ஒருநாள்மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்தியா விளையாட இருக்கிறது.

இந்திய அணியின் முக்கிய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து தொடரில் விளையாட இருப்பதால், இலங்கை அணியுடனான தொடரில் விளையாட மாட்டர்கள். முற்றிலும் இளம் வீரர்கள் மட்டுமே இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளனர்.

இந்தநிலையில், இந்தியா - இலங்கை தொடரின்போட்டி அட்டவணையை, அந்ததொடரை ஒளிபரப்பு செய்யவிருக்கும் சோனி நெட்வொர்க் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா - இலங்கை அணிகள் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளன. ஒருநாள் தொடர் ஜூலை 13ஆம் தேதியும், இருபது ஓவர் போட்டி தொடர் ஜூலை 21ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.

indian cricket srilanka
இதையும் படியுங்கள்
Subscribe