Advertisment

பும்ராவின் வருகை; அணிக்கு திரும்பும் சீனியர் வீரர்கள்; வெற்றியுடன் துவங்குமா இந்தியா?

India Vs Sri Lanka ODI Cricket Match; Who wins?

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். நடந்து முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. தொடர் நாயகனாக அக்‌ஷர் படேல் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisment

இந்நிலையில், நாளை முதல் ஒருநாள் தொடர் ஆரம்பமாக உள்ளது. காயம் காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் மற்றும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நிலையில்ரோஹித் சர்மாநாளை நடைபெற இருக்கும் போட்டி மூலம் அணிக்கு திரும்பியுள்ளார்.இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட விராட் கோலி, கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் அணிக்கு திரும்பியுள்ளார். சீனியர்கள்களமிறங்கும் இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெற்றியுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

டி20 தொடரை இந்தியாவுடன் இழந்த நிலையில் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை அணி உள்ளது. டி20 தொடரிலும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், ஒருநாள் போட்டியிலும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இரு அணிகளும் 162 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 93 ஆட்டங்களில் இந்தியாவும், இலங்கை 57 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகளில் முடிவு இல்லை.

இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷான் கிஷன் , அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, மஹீஷ் தீக்ஷனா, டில்ஷான் மதுஷங்கா, லஹிரு குமாரா, அஷேன் பண்டாரா, நுவா குமாரா, அஷேன் பண்டாரா, பிரமோத் மதுஷன், துனித் வெல்லலகே, கசுன் ராஜிதா, ஜெப்ரி வான்டர்சே, சதீர சமரவிக்ரமா

indvssl srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe