/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ICC_0.jpg)
இந்தியகிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டிஇங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
சௌத்தாம்டனில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 41, ரோஹித் ஷர்மா 30 ரன்களை எடுத்தனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரைக் கைப்பற்ற நியூசிலாந்து அணிக்கு 139 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.அதைத் தொடர்ந்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களும், நியூசிலாந்து அணி 249 ரன்களும் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)