Skip to main content

இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அரைசதம்!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

உலக்கோப்பை முதல் அரையிறுதி தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

 

 

INDIA VS NEW ZEALAND SEMI FINAL MATCH RAVINDRA JADEJA OFF CENTURY

 

 

 

முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்திய அணி வெற்றி பெறும் முனைப்பில் டோனி, ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இந்திய அணி வீரர் ஜடேஜா மூன்று சிக்ஸர், போர் அடித்து அரை சதத்தை கடந்தார்.

 

 

 

 

Next Story

பேஸ்பால் டெஸ்டை பேட்டிங்கால் தகர்த்து சரித்திரம் படைத்த இந்தியா

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
ind vs eng bazball test match update india gets a historical win

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும்,  சர்பராஸ் கான் 62 ரன்களும் எடுத்தனர்.  இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக  சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ஆனால் அடுத்து களமிறங்கிய கில் பொறுப்புடன் ஆட இந்திய அணியின் ஸ்கோர் 196-2 என மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தது.

தொடர்ந்து 4ஆவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணிக்கு கில் மற்றும் குல்தீப் சிறப்பாக ஆடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 91 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். பின்னர் ரிட்டையர்டு ஹர்ட் ஆன ஜெய்ஸ்வால் மீண்டும் ஆடக் களமிறங்கினார். சிறப்பாக நைட் வாட்ச்மேன் இன்னிங்ஸ் ஆடிய குல்தீப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வாலுடன் சர்பிராஸ் கான் இணைந்தார். இந்த இணை அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. சிறப்பாக மற்றும் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் மற்றும் சர்பிராஸ் கான் இணை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களையும் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் சர்பிராஸ் கானும் அரைசதம் கடந்தார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 430 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.  557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. ஆனால் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறத் தொடங்கியது. இந்திய அணியின் சுழலில் இங்கிலாந்து வீரர்கள் சுழற்றி அடிக்கப்பட்டனர். அந்த அணியின் டாப் 4 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.  கேப்டன் ஸ்டோக்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டெயிலெண்டரான மார்க் வுட் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சிறப்பாக செயல்பட்ட ரவிந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி எனும் பெருமை கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 2022இல் நியூசிலாந்துக்கு எதிராக 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் இது இரண்டாவது மோசமான தோல்வியாகும். இதற்கு முன் 1934 இல் ஆஸி.க்கு எதிராக 562 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மிகவும் மோசமான தோல்வியாகும்.

மேலும் இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அடித்த சிக்சர்கள் மூலம் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.  அவர் அடித்த 12 சிக்சர்கள் மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் எனும் வாசிம் அக்ரம் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த சீரிஸில் 48 சிக்சர்கள் அடிக்கப்பட்டதன் மூலம் ஒரு சீரிஸில் அதிக சிக்சர் அடித்த அணி எனும் தன் சாதனையை இந்திய அணி, தானே முறியடித்துள்ளது.

- வெ.அருண்குமார்

Next Story

இந்தியா அபார வெற்றி! ஜடேஜா தொட்ட புதிய உச்சம்!

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

Great victorGreat victory India vs south africa worlcup cricket update Jadeja five wicket hauly for India! Jadeja reached a new peak

 

உலகக் கோப்பை 2023ன் 37 ஆவது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய ரோஹித், கில் இணை அதிரடியுடன் தொடங்கியது. ரோஹித் 264 அடித்த ஈடன் கார்டன் மைதானம் என்பதால், பவுண்டரிகளும், சிக்ஸர்களும் மட்டுமே அடிப்பேன் என்று முடிவு எடுத்து ஆடினார். இதனால் தென் ஆப்பிரிக்க பவுலர்களும், பீல்டர்களும் செய்வதறியாது திகைத்தனர். ரோஹித் அதிரடி மூலம் இந்திய அணி 5 ஓவர்களுக்குள்ளேயே 50 ரன்களைக் கடந்தது. பவுண்டரி அடிக்க முற்பட்டு ரோஹித் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கோலியுடன் இணைந்த கில் நிதானமாக ஆடினார். 23 ரன்களில் கில்லும் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் மற்றும் கோலி இணை மிகவும் பொறுமை காட்டியது. ஷ்ரேயாஸ் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுலும் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யா 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர ஓரளவு உதவினார். ஆனால் கடந்த ஆட்டத்தைப் போலவே க்லெளவில் பட்டு கேட்ச் ஆனார்.

 

ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் கோலி தன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தான் ஏன் இன்னும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். சிறப்பாக ஆடிய கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 ஆவது சதத்தைக் கடந்து, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த மாஸ்டர் சச்சினின் சாதனையை சமன் செய்தார். கோலியின் 35 ஆவது பிறந்த நாளான இன்று இந்த  சதம் அடிக்கப்பட்டது கூடுதல் சிறப்பாகும். இறுதியில் ஜடேஜாவின் அதிரடியான 29 ரன்கள் உதவியுடன், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இங்கிடி, ஜான்சென், மஹராஜ், ஷம்சி, ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது.

 

தொடர்ந்து சிறப்பாக ஆடி சதங்கள் குவித்து வந்த டி காக் 5 ரன்னில் வெளியேறி இந்திய ரசிகர்களை நிம்மதி அடைய வைத்தார். கேப்டன் பவுமா 11 ரன்களில் வெளியேறி இம்முறையும் ஏமாற்றினார், மார்க்ரம் 9, க்ளாசென் 1, மில்லர் 11, வேன் டர் டசன் 13 என அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், குல்தீப்  2 விக்கெட்டுகளையும் மற்றும் சிராஜ் ஒரு விக்கெடையும் கைப்பற்றினர். இதன் மூலம் ஜடேஜா, உலகக்கோப்பை போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்களில் இரண்டாவது வீரரானார். முதல் வீரராக முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் உள்ளார். சிறப்பாக ஆடி தனது 49 ஆவது சதத்தைப் பதிவு செய்த கோலி, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் இந்திய அணி முதலிடத்தை உறுதி செய்துள்ளது. 

 

இந்த தோல்வியானது தென் ஆப்பிரிக்க அணியின் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக வித்தியாசம் கொண்டது. இதன் மூலம், இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மிக அதிக ரன்கள் வித்தியாசம் கொண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

- வெ.அருண்குமார்