மாற்றங்களுடன் இந்திய அணி : அயர்லாந்துடன் இரண்டாவது டி20

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது.

indian

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் மோதுகிறது. டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனர்களும், ஸ்பின்னர்களும் மிகச்சிறப்பாக விளையாடியது வெற்றியை எளிமையாக்கியது.

இதையடுத்து, இன்று நடக்கவிருக்கும் இரண்டாவது டி20 போட்டியில், கேப்டன் விராட் கோலி அறிவித்ததுபோல் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இன்றைய போட்டியில் தொடக்கவீரர் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே.எல்.ராகுல் களமிறங்க இருக்கிறார். அதேபோல், நிதகாஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திற்கிற்கு இடமளிக்கப்படவுள்ளது. பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமாருக்கு பதில் உமேஷ் யாதவ்வும், ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதில் சிதார்த் கவுலும் இறங்குவார்கள் என்று தெரிகிறது. முந்தைய போட்டியில் படுதோல்வி அடைந்த அயர்லாந்து அணி, இன்று தவறுகளைச் சரிசெய்துகொண்டு சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.

indian cricket ireland MS Dhoni virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe