Advertisment

சென்னையில் 2 டெஸ்ட்... 'பிங்க்' பந்து போட்டி - அசத்தலான இந்தியா, இங்கிலாந்து போட்டி அட்டவணை!

test

Advertisment

இங்கிலாந்து அணி, அடுத்தாண்டு பிப்ரவரிமாதம், இந்தியாவில்சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. கரோனாதொற்று காரணமாக, இந்தத் தொடர் முழுவதும் மூன்றேமைதானங்களில் நடக்கவுள்ளது.

Advertisment

பிப்ரவரிஐந்தாம்தேதி தொடங்க இருக்கும்நான்கு போட்டிகள்கொண்டடெஸ்ட்தொடரில், முதல் இரண்டு போட்டிகள், சென்னையில் நடைபெற இருக்கிறது. இதன்மூலம்நீண்ட நாட்களுக்குப் பிறகு, சென்னையில் டெஸ்ட்போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கடைசிஇரண்டு டெஸ்ட்போட்டிகள், உலகின்மிகப்பெரிய மைதானமான, சர்தார்வல்லபாய்படேல்மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், மூன்றாவது டெஸ்ட்போட்டி, பகலிரவுஆட்டமாக, பிங்க் நிறப் பந்தைக் கொண்டு நடைபெறவிருக்கிறது. இது, இந்தியாவில்நடைபெற இருக்கும்இரண்டாவது பகலிரவுடெஸ்ட்போட்டியாகும். ஏற்கனவே இந்தியா, வங்கதேச அணியோடுபகலிரவுடெஸ்ட்போட்டியில்ஆடியுள்ளது. அப்போட்டிகொல்கத்தாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட்தொடரைத்தொடர்ந்து, இரு அணிகளும்மோதும்இருபது ஓவர்போட்டித்தொடர், மார்ச்12 -ஆம் தேதி தொடங்கி 20 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஐந்து போட்டிகளைக் கொண்டஇந்தத் தொடர் முழுவதும், சர்தார்வல்லபாய்படேல்மைதானத்திலேயே நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இந்தியா - இங்கிலாந்து அணிகள், மூன்று ஒருநாள்போட்டிகளில் மோதவுள்ளன. இந்த மூன்று போட்டிகளும், புனேவில் நடைபெறவுள்ளன.

England Cricket indian cricket Test cricket
இதையும் படியுங்கள்
Subscribe