Dhoni

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. லீட்ஸில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 - 1 என்ற கணக்கில் ஏற்கெனவே டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், 1 - 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இன்று நடக்கும் போட்டியே வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதால், எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.

Advertisment

அடுத்தாண்டு இங்கிலாந்தில் வைத்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. உலக தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்த அணிகள் இப்போதே அதிக கவனம் பெற்றுள்ளன. இந்திய அணியின் குல்தீப் யாதவ்வின் அட்டாக்கை இங்கிலாந்து அணி சிறப்பாக கணித்து செயல்படுகிறது. முதுகுவலி காரணமாக ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார் இந்த போட்டியிலும் களமிறங்கமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.