இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவதுடெஸ்ட்போட்டி, நேற்றுதொடங்கியது. சென்னையில் நடைபெறும்இந்தப் போட்டியில், டாஸ்வென்றஇங்கிலாந்து பேட்டிங்செய்தது.
இங்கிலாந்தின் தொடக்கஆட்டக்காரர்கள், முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள்சேர்த்தனர். இதன்பிறகு இங்கிலாந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் ஜோரூட்டும், டொமினிக் சிபிலியும்சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். முதல்நாளின் கடைசிபந்தில்டொமினிக் சிபிலி, பும்ராபந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து முதல்நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து263 ரன்கள்எடுத்தது.
இரண்டாம் நாளானஇன்று ஜோரூட்நிலைத்து நின்று ஆட, மறுபுறம்பென்ஸ்டோக்ஸ் அதிரடி காட்டினார். இதனால், இங்கிலாந்து சீராக ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. ஸ்டோக்ஸ் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் சிறப்பாக ஆடியஜோரூட்இரட்டை சதமடித்து 218 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இதனால், இங்கிலாந்து அணி 555 ரன்கள் குவித்துவலுவான நிலையில்உள்ளது.
இதுமட்டுமின்றி போகப்போக பந்து நன்றாகத் திரும்பும் எனஎதிர்பார்க்கப்படுவதால், இந்திய அணி பேட்ஸ்மேன்கள், முதல் இன்னிங்ஸில் நிலைத்து நின்று ஆடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.