இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவதுடெஸ்ட்போட்டி, கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. சென்னையில் நடைபெறும்இந்தப் போட்டியில், டாஸ்வென்றஇங்கிலாந்து அணி, ஜோ ரூட் மற்றும் பென்ஸ்டோக்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 578 ரன்கள்குவித்தது.
அதற்குப்பிறகு ஆடியஇந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. புஜாரா(73), பந்த் (91) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், ஒரு கட்டத்தில் இந்திய அணி, போட்டியில் மீண்டுவருவதை போல தெரிந்தாலும், அவர்கள் இருவரும்ஆட்டமிழந்ததும் மீள வாய்ப்பில்லாமல் போனது. கடைசிகட்டத்தில் வாஷிங்டன் சுந்தர்மட்டும் தனியாகப் போராட இந்திய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சுந்தர்85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
241 ரன்கள் இந்தியா பின்தங்கி இருந்ததால்இங்கிலாந்து ஃபாலோ-ஆன் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி மீண்டும் பேட் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. அதனையடுத்து இன்னிங்சின் முதல் பந்திலயேரோரி பர்ன்ஸைஆட்டமிழக்கச் செய்துள்ளார் அஸ்வின். உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 1 ரன்னுக்குஒரு விக்கெட்டை இழந்து, 242 ரன்கள்முன்னிலையில் உள்ளது.