முதலாவது டி20: கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த விராட் கோலி!

IND VS ENG

இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்தநிலையில், இரு அணிகளுக்குமிடையேயானஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர், இன்று தொடங்குகிறது. நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கும்இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டிக்கான இந்திய அணியில், ரிஷப் பந்த், காயம் காரணமாக நீண்ட நாட்கள் அணியில் இடம்பெறாமலிருந்தஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் தொடரில் கலக்கிய அக்ஸர் படேல், இருபது ஒவர்அணியில் இடம்பிடித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கோலி, "கே.எல் ராகுலும்ரோகித் ஷர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள்" எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இன்று திடீர் திருப்பமாக ரோகித்திற்கு முதல் சில போட்டிகளில் ஓய்வளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். ரோகித்திற்குப் பதிலாக தவான் தொடக்க ஆட்டக்காரராக இறங்கவுள்ளார்.

INDIA VS ENGLAND Rohit sharma virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe