இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட்போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 'டாஸ்' வென்றஇந்திய அணி, முதலில் பேட்டிங்செய்தது.
சுப்மன்கில், புஜாரா, விராட்கோலிஆகியோர்விரைவில் ஆட்டமிழந்தாலும், அதிரடியாக ஆடியரோகித்சர்மாசதமடித்தார். டெஸ்ட்கிரிக்கெட்டில், இது அவரது7-வது சதமாகும். மேலும், ரஹானேஅரை சதமடித்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியஅணி சீரானவேகத்தில்ரன்களைக் குவித்தது.
சிறப்பாக ஆடியரோகித்சர்மா, 161 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரஹானே67 ரன்களில்ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய அஸ்வின், 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரிஷப்பந்த் 33 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து முதல்நாள் ஆட்டநேரமுடிவில்இந்தியஅணி, 6 விக்கெட்டுகளை இழந்து300 ரன்களைஎடுத்து வலுவான நிலையில் உள்ளது.
அதேநேரத்தில் ரோகித்சர்மாதனதுமனைவி ரித்திகாவிற்கு காதலர்தினபரிசளித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். இந்தப் போட்டியைக் காண ரித்திகா மைதானத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.