இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவதுடெஸ்ட்போட்டி, கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. சென்னையில் நடைபெறும்இந்தப் போட்டியில், டாஸ்வென்றஇங்கிலாந்து அணி, ஜோ ரூட் மற்றும் பென்ஸ்டோக்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 578 ரன்கள்குவித்தது.
அதற்குப்பிறகு ஆடியஇந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. புஜாரா(73), பந்த் (91) ஆகியோரின் சிறப்பானஆட்டத்தாலும், கடைசிகட்டத்தில் வாஷிங்டன் சுந்தரின் போராட்டத்தாலும் இந்திய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சுந்தர்85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து ஆடியஇங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் யாரும்நிலைத்து நின்று ஆடவில்லை. ஜோரூட்மட்டும் 40 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அட்மிழந்தது. இதனையடுத்து 420 ரன்கள் எடுத்தால்வெற்றி என்ற கடினஇலக்குடன் இந்தியாகளமிறங்கியது. ரோகித் சர்மா12 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல்நாள்ஆட்டநேர முடிவில்இந்தியஅணி 39 ரன்களுக்கு 1 விக்கெட்டைஇழந்துள்ளது. இந்தியா, வெற்றிப் பெற இன்னும் 381 ரன்கள்தேவை என்ற நிலையில், நாளை இறுதிநாள் ஆட்டம் நடைபெறுகிறது.