ind vs aus

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்தொடர், இன்று தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட்போட்டி, பகலிரவுஆட்டமாக, அடிலெயிட்டில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ்வென்றஇந்திய கேப்டன்கோலி,பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து தொடக்கஆட்டக்காரராகக் களமிறங்கிய பிரித்விஷா, ஆட்டத்தின் இரண்டாம்பந்திலேயேபோல்டுஆனார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால், சிறிதுநேரம் போராடிவிட்டுஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த 'விராட்கோலி- புஜாரா' கூட்டணிநிதானமாக ஆடியது.

புஜாராதனதுவழக்கமானஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா அணியும்சிறப்பாகப் பந்து வீசியதால் ரன்எடுப்பதுகடினமாகவே இருந்தது.அணியின் எண்ணிக்கை 100-ஐ தொட்டபோது, 160 பந்துகளில் 43 ரன்கள்எடுத்த புஜாரா, நாதன் லையன்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரஹானேவும் கோலியும்ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளித்துரன்களைச்சேர்க்கத் தொடங்கினர்.

Advertisment

சிறப்பாக ஆடிவந்தகேப்டன்கோலி180 பந்துகளை எதிர்கொண்டு 74 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக ரன்அவுட்ஆனார்.இதன்பிறகு 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரஹானேவும், ஹனுமாவிஹாரியும்ஆட்டமிழக்க, 184 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நல்ல நிலையில் இருந்தஇந்திய அணி, 206 க்கு6 என்ற இக்கட்டான நிலையில் சிக்கியது.

முதல்நாள்ஆட்டநேர முடிவில்இந்திய அணி, 233 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அஸ்வின்15 ரன்களுடனும், சஹா9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.