Advertisment

கரோனா அச்சம்: இந்தியா - ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்டில் மாற்றம்!

ind vs aus

Advertisment

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்மோதும்டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இரு அணிகளும்மோதும்மூன்றாவது டெஸ்ட்போட்டி, சிட்னிமைதானத்தில் நடைபெறும் எனஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிட்னியில் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்கள், சிட்னியிலிருந்து தங்கள் மாநிலத்திற்குள்வரத் தடை விதித்துள்ளன. மேலும், சிலமாநிலங்கள்,சிட்னியிலிருந்து வருபவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.இருப்பினும் மூன்றாவது டெஸ்ட்போட்டி சிட்னியிலேயே நடைபெறும்எனஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, அதிகரித்து வரும் கரோனா தொற்று, மற்றும் புதியவகை கரோனா பரவல் காரணமாக சிட்னியிலிருந்து மைதானத்திலிருந்து மெல்போர்ன் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. இதே மைதானத்தில் தான் இரு அணிகளும் மோதிய இரண்டாவது டெஸ்ட்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

indvsaus sydney
இதையும் படியுங்கள்
Subscribe