இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்இடையேயான டெஸ்ட்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றுள்ளன.
இந்தநிலையில், மூன்றாவது டெஸ்ட்போட்டிக்கானஆஸ்திரேலிய அணியில், அதிரடி தொடக்கஆட்டக்காரர் டேவிட்வார்னர்சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியஅணிக்கு எதிரானஒரு நாள் தொடரின்போது காயமடைந்த வார்னர், அடுத்து நடைபெற்ற இருபது ஓவர் தொடர் மற்றும் இரு அணிகளுக்குமிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகினார். அதன்பின் உடல் தகுதி பெற்றுவிட்டாலும், அணியின் கரோனாதடுப்பு வளையத்திற்கு வெளியில் இருந்ததால்இரு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சேர்க்கப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.