ADVERTISEMENT

தடுமாறும் இந்திய அணி!

11:25 AM Nov 27, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

துவக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஜோடி களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து விளையாடி வரும் இந்த ஜோடி அணியின் ரன்களை 100-ஆக உயர்த்தியுள்ளது. 26 ஓவரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 140 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரர்களாகக் களமிறங்கிய இரு வீரர்களும் அரைசதம் அடித்தனர். டேவிட் வார்னர் 73 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்களும், ஆரோன் பின்ச் 86 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்களும் சேர்த்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி இந்தக் கூட்டணியைப் பிரிக்க வேகம், சுழல் என 5 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT