Skip to main content

தடுமாற்றம் கண்ட இந்திய அணி... புத்துணர்ச்சி பெற்ற ஆஸ்திரேலியா...

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா அணி ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாத இந்திய அணி போன்றது என்ற கருத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நிலவியது. பலவீனமான அணியாக கருதப்பட்ட ஆஸ்திரேலியா இந்தியாவை சொந்த மண்ணில் இரண்டு தொடர்களில் வீழ்த்தியது இந்திய அணியில் உள்ள சில பலவீனங்களை வெளிக்காட்டியுள்ளது.

 

aus vs ind

 

2017-ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு தொடர்ந்து 6 ஒருநாள் போட்டிகள் தொடரில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது ஆஸ்திரேலியா அணி. அதேபோல 2017-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரே ஒரு டி20 தொடரை மட்டுமே வென்றிருந்தது ஆஸ்திரேலியா. அது ஐக்கிய அரபு நாடுகளுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி தொடர். 

 

டி20 தொடரில் மேக்ஸ்வெல்லின் அதிரடி பேட்டிங் காரணமாக வென்றது ஆஸ்திரேலியா. ஒருநாள் தொடரில் பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என அனைத்திலும் மாஸ் காட்டியது. கம்மின்ஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் விக்கெட்களையும் வீழ்த்தி, நல்ல எகனாமி ரேட்டையும் மெயின்டைன் செய்தனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் சோபிக்காத கவாஜா இந்த தொடரில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் எடுத்து தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரரானார். மிடில் ஆர்டர் பேட்டிங்கும் கலக்கியது. 

 

khawaj

 

உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு நியூசிலாந்து மற்றும் தற்போது முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பல மாற்றங்களை பரிசோதனை முறையில் செய்தது இந்திய அணி. பரிசோதனை முயற்சியில் சில வெற்றிகளையும், சில தோல்விகளையும் சந்தித்துள்ளது. விஜய் சங்கர் பேட்டிங் ஆல்ரவுண்டராக ஓரளவு பங்களித்துள்ளார். ஜடேஜா பவுலிங்கில் அவ்வப்போது அசத்தினாலும் பேட்டிங்கில் தொடர்ந்து எமாற்றி வருகிறார். மேலும் ஜடேஜா விக்கெட்களை அதிகம் எடுப்பதில்லை.   

 

டாப் 3 பேட்ஸ்மேன்களை இந்திய அணி அளவுக்கு அதிகமாக நம்பியிருக்கிறது என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொடரிலும் அணியின் ரன்களில் 60%-க்கும் அதிகமாக ரன்களை குவித்து வந்தனர் கோலி, சர்மா, தவான். கடைசி இரண்டு தொடர்களில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அணியின் ஸ்கோரில் 50% ரன்களை குவித்துள்ளனர். இந்த 2 தொடர்களிலும் ரோஹித் மற்றும் தவானின் ரன் விகிதம் குறைந்துள்ளது.      

 

rohit

 

வழக்கம்போல மிடில் ஆர்டர் பேட்டிங் பெரியளவில் பலனிக்கவில்லை. தோனி, விஜய் சங்கர், ஜாதவ் ஓரளவு பங்களிக்க மற்றவர்களின் பேட்டிங் ஏமாற்றத்தை அளித்தது. புவனேஷ் குமார் தவிர மற்றவர்களின் லோவர் ஆர்டர் பேட்டிங் அணிக்கு ரன்களை எடுக்க தவறுகிறது. மேலும் இந்த தொடரில் விக்கெட்களை வீழ்த்த இந்திய அணியின் பவுலர்கள் தவறினர். அது தொடரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 
 

தோனிக்கு 2 போட்டிகளில் ஓய்வளித்தது லீடர்ஷிப்பிலும், கீப்பிங்கிலும் உள்ள குறைகளை வெளிகொண்டுவந்தது. பீல்டிங் கடந்த சில தொடர்களாக மிகவும் சொதப்பலாக உள்ளது. கேட்ச்களை மிஸ் செய்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. டாப் ஆர்டர்ரை அதிகம் சார்ந்திருப்பது, இக்கட்டான சூழ்நிலையில் மிடில் ஆர்டரின் பேட்டிங் ஸ்டைல், விக்கெட்களை வீழ்த்தாத மிடில் ஓவர் பவுலிங், ஃபாஸ்ட் பவுலர்களின் மைனஸ், சொதப்பும் பீல்டிங் உள்ளிட்ட பலவீனங்களை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்கள் இந்திய அணிக்கு உணர்த்தியுள்ளது. 

 

gayal

 

சமீபத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நம்பர் 1 இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் தொடர் 2- 2 என்ற கணக்கில் டிரா ஆனது. கடைசி போட்டியில் 227 பந்துகள் மீதமிருக்கும்போது மிகப்பெரிய தோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு 226 பந்துகள் இருக்கும்போது தோல்வி அடைந்ததுதான் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது. 2 ரன்கள் எடுப்பதற்குள் கடைசி 5 விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து. கெயிலின் பேட்டிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது இங்கிலாந்து.
 

கடந்த சில ஆண்டுகளாக பலவீனமான அணிகளாக கருதப்பட்டு வந்த வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா போன்ற அணிகள் இங்கிலாந்து, இந்தியா போன்ற டாப் அணிகளை வென்றது அந்த அணிகளுக்கு புத்துணர்ச்சியை  அளித்துள்ளது. உலகக்கோப்பை போட்டிகளுக்கு இன்னும் 70 நாட்களே உள்ள நிலையில் உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று பலரும் சொல்லிவந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இந்த தொடரின் முடிவுகள் எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.