Advertisment

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே கடைசியாக நடந்த ஐந்து தொடர்களின் வெற்றி விவரம்!

ind vs aus

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் தொடராக, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் வரும் வெள்ளிக்கிழமை துவங்க இருக்கிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட கடந்த சுற்றுப்பயணத்தில் அதிரடி வெற்றிகள் பெற்று தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.

Advertisment

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடைசியாக நடந்த 5 ஒருநாள் தொடர்களின் வெற்றி விவரங்களைப் பார்ப்போம்.

Advertisment

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் 2019-20 -ஆம் ஆண்டு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணி 2018-19 -ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்திய சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இத்தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2018-19 -ஆம் ஆண்டு இந்திய அணி மேற்கொண்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2017-18 -ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மேற்கொண்ட இந்திய சுற்றுப் பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் இடம்பெற்றன. இத்தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

2015-16 -ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இத்தொடரை ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடைபெற்ற 5 தொடர்களில், இந்திய அணி 3 முறையும் ஆஸ்திரேலிய அணி 2 முறையும் வென்றுள்ளன.

india vs Australia
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe