Advertisment

இந்தியா முன்னிலை... பந்து வீச்சாளர்கள் அபாரம்!

ashwin

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும்டெஸ்ட்தொடரின் முதல் போட்டி, நேற்று அடிலெய்ட் மைதானத்தில்தொடங்கியது. டாஸ் வென்று முதலில்பேட்டிங் செய்தஇந்திய அணி, முதல்நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 233 ரன்களை எடுத்திருந்தது.இதனைத் தொடர்ந்து, இரண்டாம்நாளான இன்று, களமிறங்கிய இந்தியஅணி, அரை மணி நேரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. மேற்கொண்டுவெறும் 11 ரன்களைமட்டுமேஎடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், நாதன் லயன் மற்றும் ஹேசல்வூட்தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு, இந்தியபந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி கிடுக்குப்பிடி போட்டனர். குறிப்பாகஜஸ்பிரிட் பும்ரா, ஆஸ்திரேலிய அணியின் தொடக்கஆட்டக்காரர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின்முன்னணி வீரர் ஸ்மித்தைஅஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டுமுறைகேட்ச் வாய்ப்பிலிருந்து தப்பியலபூஷனே மட்டும் ஒரு பக்கம் போராட, மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் லபூஷனேவும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணி 150 ரன்னுக்குள் சுருண்டு விடும்எனஎதிர்பார்க்கப்பட்டது.

Advertisment

இருப்பினும், இறுதிக்கட்டத்தில் கேப்டன்டிம்பெயின்அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். 99 பந்துகளில் 77 ரன்களைஎடுத்து அவர் இறுதிவரைஆட்டமிழக்காமல் இருந்தார். டிம்பெய்னின்ஆட்டத்தால், ஆஸ்திரேலியா அணி 191 ரன்கள்எடுத்து ஆட்டமிழந்தது. தனது சுழற்பந்து வீச்சால்ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை திணறடித்த அஸ்வின், 4 விக்கெட்டுகளை அள்ளினார். உமேஷ்யாதவ்3 விக்கெட்டுகளையும், பும்ரா2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணியின் ஃபீல்டிங்மோசமாக இருந்தது. இந்திய வீரர்கள்இன்று 4 கேட்சுகளைத் தவறவிட்டனர். அந்த கேட்ச்சுகள் பிடிக்கப்பட்டிருந்தால் ஆஸ்திரேலிய அணியை150 ரன்களுக்குள் சுருட்டிருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து, 53 ரன்களோடு இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கியது இந்திய அணி. தொடக்கஆட்டக்காரர் ப்ரித்வி ஷா4 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள், ஆட்டநேர முடிவில், இந்திய அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மயங்க் அகர்வால்5 ரன்களுடனும், பும்ராரன்எதுவும் எடுக்காமலும்களத்தில் உள்ளனர். ஜஸ்பிரிட் பும்ராநைட்வாட்ச்மேனாக இறங்கியது குறிப்பிடத்தக்கது.

Test cricket indvsaus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe