இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் சேர்ப்பு!

INDIA VS AUSTRALIA 3RD TEST MATCH NADARAJAN BCCI ANNOUNCED

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 7-ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்கவிருந்த உமேஷ் யாதவ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிஇந்தியா திரும்பினார். இந்நிலையில் தமிழக வீரரான நடராஜன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தகவலைபி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் சேர்க்கப்பட்ட நிலையில், மூன்றாவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் நடராஜனும் இடம்பெற்றிருந்தார். சர்வதேச டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நடராஜன் தற்போது டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Australia India TEST MATCH
இதையும் படியுங்கள்
Subscribe