Advertisment

இக்கட்டான நிலையில் இந்தியா!!! ராகுலும் அவுட்...

kl rahul

Advertisment

இந்திய கிரிக்கெட் அணி தற்பொழுது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தசுற்றுப்பயணத்தில், முதலாவதாக ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

இதனைத்தொடர்ந்து, இந்தியா -ஆஸ்திரேலியா மோதும் 20 ஓவர் தொடரின் முதல் போட்டி தற்போது நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, இந்திய அணியின்கே.எல். ராகுலும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். தவான் ஒரு ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன்விராட்கோலியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 23 ரன்களிலும், மனிஷ் பாண்டே 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கே.எல். ராகுல் சிறப்பாக ஆடி அரைசதமடித்து ஆட்டமிழந்தார். தொடர்விக்கெட்டுகள் சரிவால் இந்திய அணி இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளது.

team india KL Rahul
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe