Advertisment

ரோகித் ஷர்மா இல்லாத இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது!

indian cricket team

Advertisment

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் 27-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் தொடங்குகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய புறப்பட்டுள்ள இந்திய வீரர்கள், சிட்னியில் 15 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்த உள்ளனர். தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பின்னரே இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

காயம் காரணமாக மூன்று தரப்பட்ட போட்டிகளுக்கான அணியிலும் ரோகித் ஷர்மா பெயர் இடம்பெறவில்லை. இது பெரும் சர்சையைக் கிளப்பிய நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்குப் பின் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்ப இருப்பதால், டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் மட்டும் ரோகித் ஷர்மா இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், தன்னுடைய உடற்தகுதியை மேம்படுத்த சற்று காலம் எடுத்துக்கொண்டு, டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன் ரோகித் ஷர்மா ஆஸ்திரேலியா புறப்பட இருக்கிறார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

india vs Australia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe