Advertisment

மூன்றாவது டி20யில் இந்தியா திணறல் ஆட்டம்

India stuttered in the third T20I

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று மூன்றாவது டி20 போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

Advertisment

கடந்த போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் 4 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் விராட், சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். அடுத்து வந்த சிவம் துபே ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த சாம்சன் தான் சந்தித்த முதல் பந்திலே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 22-4 என்று திணறி வந்தது.

Advertisment

பிறகு வந்த ரிங்கு சிங், ரோஹித்துடன் இணைந்து பொறுமையாக ஆடி வருகிறார்.இந்திய அணி 10ஓவர்களில் 61 ரன்கள் மட்டும் எடுத்து 4விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. கேப்டன் ரோஹித் 27ரன்கள், ரிங்கு சிங் 19ரன்களுடனும் ஆடி வருகிறன்றனர்.

வெ.அருண்குமார்

cricket India t20
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe