India-Pakistan match cancelled

Advertisment

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம்இந்தியா - பாகிஸ்தான் இடையே, இலங்கை பல்லேக்கலே மைதானத்தில் இன்று பிற்பகல் (02ம் தேதி) தொடங்கியது.டாஸை வென்றஇந்திய அணி பேட்டிங்கைத்தேர்வு செய்தது.

துவக்கத்திலேயே தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவர்களில்266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் 87 ரன்களும், இஷான் கிஷன் 82 ரன்களும் விளாசினர். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பாகிஸ்தான் அணிக்கு இந்தியா 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யத் துவங்கும் முன் பெய்யத் தொடங்கியமழைஇடைவிடாமல் பெய்து வருவதால், போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.