Advertisment

இந்தியாவிற்கு ராசியே இல்லாத போர்ட் எலிசபெத் மைதானம்! 

தென் ஆப்பிரிக்க கிரிக்கெர் அணியுடனான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்குஇந்தப் போட்டி தொடங்குகிறது.

Advertisment

Cric

இந்தப் போட்டி நடைபெறும் செயின் ஜார்ஜ் பார்க், போர்ட் எலிசபெத் மைதானத்தில் இதுவரை இந்திய அணி களமிறங்கிய போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றிபெற்றதில்லை என்கிறது வரலாறு. இந்திய அணிக்கு ராசியே இல்லாத மைதானங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மைதானத்தில் இதுவரை இந்திய அணி விளையாடிய ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மோசமான நிலையில் தோற்றிருக்கிறது. அதேசமயம், இந்திய அணி விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு தோல்வி மற்றும் டிரா மட்டுமே அடைந்தது.

Advertisment

இது ஒருபுறமிருக்க, இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கிய 62 போட்டிகளில், 23ல் தோற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒருமுறை கூட தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லவில்லை என்ற பெயரையும், போர்ட் எலிசபெத் மைதானத்தின் கறையையும் இந்திய அணி துடைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

India South africa cricket ODI
இதையும் படியுங்கள்
Subscribe