Advertisment

8 ஆண்டுகளில் 3 ஐசிசி தொடர்களை நடத்தும் இந்தியா!

world cup

Advertisment

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பைபோட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2024 முதல் 2031 வரை நடைபெறவுள்ள ஐசிசி தொடர்களை எந்தெந்த நாடுகள் நடத்தவுள்ளனஎன்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2024 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் இந்தியா, 3 ஐசிசி தொடர்களை நடத்தவுள்ளது.சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பின்படி, ஐசிசி தொடர்களும் அதனை நடத்தவுள்ள நாடுகளும் வருமாறு:

2024 டி20 உலகக் கோப்பை- அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்

2025 சாம்பியன்ஸ் ட்ராஃபி - பாகிஸ்தான்

2026 டி20 உலகக் கோப்பை - இந்தியா, இலங்கை

2027 ஒருநாள் உலகக் கோப்பை - தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா

2028 டி20 உலகக் கோப்பை - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

2029 சாம்பியன்ஸ் ட்ராஃபி - இந்தியா

2030 டி20 உலகக் கோப்பை - இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து

2031 ஒருநாள்உலகக் கோப்பை - இந்தியா, வங்கதேசம்

இதற்கிடையே 2025 சாம்பியன்ஸ் ட்ராஃபிபோட்டிகளில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

team india bcci ICC
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe