"மீண்டும் இந்தியாவில் பிங்க் பால் டெஸ்ட்" - சவுரவ் கங்குலி தகவல்!

GANGULY

இந்தியாவும், மேற்கு இந்தியதீவுகளும்மோதும் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்தியா - இலங்கையுடன் மூன்று 20 வது ஓவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்விளையாடவுள்ளது.

இந்த நிலையில்இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில், பெங்களூரில் நடைபெறும் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் நடைபெறவுள்ள மூன்றாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். ஏற்கனவே வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கங்குலி, கரோனா பாதிப்பு உச்சத்தை எட்டினால்மட்டுமே இந்தியாவில் இருந்து ஐபிஎல் போட்டிகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படும் எனவும்கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe