Skip to main content

"மீண்டும் இந்தியாவில் பிங்க் பால் டெஸ்ட்" - சவுரவ் கங்குலி தகவல்!

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

GANGULY

 

இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகளும் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்தியா - இலங்கையுடன் மூன்று 20 வது ஓவர் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

 

இந்த நிலையில் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில், பெங்களூரில் நடைபெறும் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் நடைபெறவுள்ள மூன்றாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். ஏற்கனவே வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் கங்குலி, கரோனா பாதிப்பு உச்சத்தை எட்டினால் மட்டுமே இந்தியாவில் இருந்து ஐபிஎல் போட்டிகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படும் எனவும் கூறியுள்ளார். 

 

 

Next Story

கங்குலியின் பயோ-பிக்கை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Aishwarya Rajinikanth to direct Ganguly's bio-pic

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலியின் பயோ-பிக்கை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கவுள்ளதாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. கங்குலி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் மல்ஹோத்ரா அல்லது ரன்பீர் கபூர் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் எனச் சொல்லப்பட்டது.  

 

பின்பு ரன்பீர் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து விளக்கமளித்த ரன்பீர் கபூர், "கங்குலி ஒரு லெஜண்ட். அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாவது மிகவும் சிறப்பான ஒன்று. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இப்படத்தில் கங்குலி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாகவும் டிசம்பரில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் கதாபாத்திரத்திற்கான பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து  'ஓ சாத்தி சல்' என்ற தலைப்பில் இந்தியில் ஒரு படம் பண்ணவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் அதன் பிறகு அந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது என்பதும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 


 

Next Story

"அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை" - பிரபல கிரிக்கெட் வீரர் பயோ பிக் குறித்து ரன்பீர் கபூர்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Ranbir Kapoor about Sourav Gangulys biopic

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டே வெளியானது. பின்பு இப்படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாகவும் கங்குலி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் மல்ஹோத்ரா அல்லது ரன்பீர் கபூர் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் எனச் சொல்லப்பட்டது. 

 

சமீபத்தில் கங்குலி பயோ பிக்கில் ரன்பீர் கபூர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரன்பீர் கபூர். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "கங்குலி ஒரு லெஜண்ட். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும். அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாவது மிகவும் சிறப்பான ஒன்று. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

ரன்பீர் கபூர் சமீபத்தில் கொல்கத்தா சென்று கங்குலியை சந்தித்து கிரிக்கெட் விளையாடினார். இது குறித்து ரன்பீர் கபூர் கூறுகையில், "அவருடன் கிரிக்கெட் விளையாடினது ஒரு கனவு நனவான தருணம். அவர் எனக்கு 10 பந்துகளை வீசினார். அவருடன் விளையாடுவது ஒவ்வொரு குழந்தையின் கனவாகும். இந்த தருணத்தை மிகவும் ரசித்தேன்” என்றார்.