Advertisment

உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இங்கிலாந்தை சந்திக்கப் போகும் இந்தியா!

vallabhbhai patel satdium

உலகின்மிகப்பெரிய கிரிக்கெட்மைதானமாகஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் இருந்து வந்தது. இந்த மைதானத்தில், ஒரு லட்சத்து இருபத்து நான்கு பேர் அமர்ந்துபோட்டியைப் பார்க்கலாம். ஆனால், தற்போது உலகின்மிகப்பெரிய மைதானம் என்ற பெருமையை, இந்தியாவின் சர்தார் வல்லபாய்படேல்மைதானம் கைப்பற்றியுள்ளது.

Advertisment

குஜராத் மாநிலத்தில், 800 கோடி ரூபாய் செலவில்அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில், ஒருலட்சத்து பத்தாயிரம்பேர் அமர்ந்துபோட்டியைரசிக்கலாம். இந்த மைதானத்தை, இந்தாண்டு தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்இந்தியபிரதமர் மோடியோடுஇணைந்து தொடங்கி வைத்தார்.

Advertisment

அதன்பிறகு, கரோனாதொற்றுப்பரவலால், பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், இந்தியாவில்சர்வதேசப் போட்டிகள் நடைபெறவில்லை. ஆதலால், இந்த மைதானத்திலும் இதுவரை போட்டிகள்நடைபெறவில்லை. இந்தநிலையில், இந்தியாவில்அடுத்தாண்டு பிப்ரவரிமாதம் நடக்க இருக்கும்இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், இந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறும்எனஇந்திய கிரிக்கெட்வாரியத்தின் செயலாளர்ஜெய்ஷாதெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், உள்விளையாட்டு அகாடமியைதொடங்கி வைத்த அவர், தனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த உள்விளையாட்டுஅகாடமி திறப்பு விழாவின்போது, நேற்று ஓய்வை அறிவித்த பார்த்திவ்படேல், இந்தியா மற்றும் குஜராத் அணிகளுக்கு ஆற்றியபங்களிப்புக்காகக் கவுரவிக்கப்பட்டார்.

indian cricket England Cricket gujarat stadium
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe