/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/163_39.jpg)
சீனாவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டு போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாமுதல்முறையாக 100 பதங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
சீனா ஹாங்சோவ் நகரில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களை வென்றதோடு, தொடர்ந்து பதக்க வேட்டைநடத்தி வருகிறது. இன்று காலை நடைபெற்ற மகளிர் கபடி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இதன் மூலம் இந்தியா தனது 100வது பதக்கத்தை பெற்றுள்ளது.
25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் 4 -ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றிருந்தநிலையில், தற்போது 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)