மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை; முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா!

team india

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்தாண்டு மார்ச் 4 ஆம் தேதி நியூசிலாந்தில் தொடங்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த உலகக்கோப்பை போட்டியின் முதல் போட்டியில், நியூசிலாந்து அணி, மேற்கு இந்தியதீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

இந்த உலகக் கோப்பையில், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானைஎதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மார்ச் ஆறாம் தேதி நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பையின் அரையிறுதி போட்டிகள், மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

உலகக்கோப்பையின்இறுதிப் போட்டி, ஏப்ரல் 3 ஆம்தேதி நடைபெறவுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளதும்குறிப்பிடத்தக்கது.

Pakistan Women
இதையும் படியுங்கள்
Subscribe