இலங்கையை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி!

India beat Sri Lanka by 38 runs

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் 50, ஷிகர் தவான் 46, சஞ்சு சாம்சன் 27 ரன்களை எடுத்தனர்.

அதேபோல், இலங்கை அணி தரப்பில் ஷமீரா, ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகளையும், கருணரத்னே ஒரு விக்கெட்டை வீழத்தினார்.

அதைத் தொடர்ந்து, 165 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது.

இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், குருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

CRICKET MATCH India Sri Lanka t20
இதையும் படியுங்கள்
Subscribe