இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 7 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற உள்ளது.

Advertisment

india bangladesh second t20 match may get affected by maha cyclone

இந்தநிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள மஹா புயல் நவம்பர் 7 ஆம் தேதி தான் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7 ஆம் தேதி அதிகாலையில் குஜராத்தின் டையு மற்றும் போர்பந்ததர் அருகே மஹா புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகம் வரையில் காற்று அடிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் டி 20 போட்டி இதனால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே டெல்லியில் நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.