இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. கடைசி நாள் ஆட்டமான இன்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இந்தியா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் அஸ்வின், பும்ரா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.