IND vs SA : அசத்திய இந்திய அணி; அறிமுக போட்டியில் தமிழக வீரர் அபாரம்!

IND vs SA Unreal Indian team The Tamil Nadu player is great in the debut match

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க இயலாமல் 27.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 117 ரன்களை வெற்றி இலக்காக தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயித்தது. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அர்ஷ்தீப் சிங் அசத்தினார்.

இதனையடுத்து 117 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை கொண்டு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் இந்தப் போட்டியில் அறிமுகமானார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாய் சுதர்சன், போட்டி முடியும் வரை 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டியில்தமிழ்நாட்டைச் சேர்ந்தஅறிமுக வீரர்சாய் சுதர்சன் அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

cricket India
இதையும் படியுங்கள்
Subscribe