IND vs SA : அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு, திலக்!

IND vs SA  T20 series Sanju and Tilak century

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் இன்று (15.11.2024) நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகிய இரு இந்திய வீரர்கள் சதம் அடித்து அசத்தியுள்ளனர். அதன்படி இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 120 ரன்களை குவித்தார். சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 109 ரன்களை குவித்தார். முன்னதாக அபிசேக் சர்மா 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

லூத்தோ சிபம்லா, அபிசேக் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியில் இந்திய அணி நிர்ணயப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்களை குவித்தது. இதனையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்க உள்ளது.

cricket India
இதையும் படியுங்கள்
Subscribe