Advertisment

ஒரு நாள் கிரிக்கெட் - இந்திய அணி அபார வெற்றி!

ind vs eng one day match india had win

Advertisment

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று (23/03/2021) நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

ind vs eng one day match india had win

Advertisment

இந்திய அணி தரப்பில், அதிகபட்சமாக ஷிகர் தவான் 98, ராகுல் 62, குர்னால் பாண்டியா 58, விராட் கோலி 56 ரன்கள் எடுத்தனர். அதேபோல், இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பெய்ர்ஸ்டோவ் 94, ஜாசன் ராய் 46, மொயின் அலி 30 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 4, ஷர்துல் தாக்கூர் 3, புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

INDIA VS ENGLAND INDIA WIN one day match
இதையும் படியுங்கள்
Subscribe