IND VS AUS : India won the final

Advertisment

இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 21 ரன்களும் ருதுராஜ் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து வந்த சூரியகுமார் 5 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இவருடன் கூட்டணி சேர்ந்த அக்சர்பட்டேல் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 161 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ராவிஸ் ஹெட்28 ரன்களும், ஜோஸ் பிலிப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. முகேஷ் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தியது. மேலும் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.