Advertisment

தொடரை வெல்லப்போவது யார்..? இந்தியா ஆஸ்திரேலியா மோதல்...

india australia

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோது ஒருநாள் போட்டி டெல்லி, பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. தொடக்கம் முதல் ஆஸ்திரேலியா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சரியாக 100 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து ஹண்ட்ஸ்கோம்ப் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பாக பந்துவீசிய இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை, ஜடேஜா மற்றும் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து 273 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

Advertisment

Delhi indvsaus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe