Advertisment

கொல காண்டுல இம்ரான் தாஹிர்... சீமை ரொட்டி பார்சல் கேட்ட சி.எஸ்.கே; ட்விட்டர் அலப்பறைகள்...

gfhgfhgf

Advertisment

வரும் மார்ச் 23 ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் முதல் ஆட்டமே சென்னை, பெங்களூருக்கு இடையே நடைபெற உள்ள நிலையில் ரசிகர்கள் இப்போதே சமூகவலைதளங்களில் யார் வெற்றி பெற போகிறார்கள் என மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர் இம்ரான் தாஹிர் தமிழில் ஒரு ட்வீட் செய்திருந்தார், அதற்கு சிஎஸ்கே அணி திரும்ப ரிப்ளை செய்தது. இந்த இரண்டு ட்வீட்டுகளும் சமூகவலைதளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதில் முதலில் இம்ரான் தாஹிர், 'என் இனிய தமிழ் மக்களே நலமா? களம் இறங்குகிறோம் மார்ச் 23. நமது கோட்டையில். வந்தோம், வென்றோம், சென்றோம். திரும்ப வர்றோம், வெல்வோம். இந்த வருஷம் எங்க காளியோட ஆட்டத்தை பார்ப்பிங்க. கொல காண்டுல வர்றோம், செண்டிமெண்ட் உள்ளவன் எல்லாம் ஓடிடு' என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சிஎஸ்கே, 'நலம். நலமறிய ஆவல். ஆசையாய் வளர்க்கும் சிங்கக்குட்டி எப்படி இருக்கிறது? தென் ஆப்பிரிக்காவில் நல்ல மழை பெய்கிறதா? தம்பி இங்கிடி சவுக்கியமா? வரும்போது சீமை ரொட்டியும், மிட்டாயும் வாங்கி வரவும்' என பதிலளித்தது. இந்த உரையாடலை இப்போது சிஎஸ்கே ரசிகர்கள் பெருமளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

CSK IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe