பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு உதவியாளராக நயீம் உல் ஹக் தனது ட்விட்டர் பக்கத்தில் இம்ரான் கான் என பதிவிட்டு அதில் இம்ரான் கானுக்கு பதிலாக சச்சினின் புகைப்படத்தை வைத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயீம் உல் ஹக் தனது ட்விட்டர் பக்கத்தில், “1969-ல் பிரதமர் இம்ரான் கான்” என்று தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் இம்ரான் கானுக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானியர்களும் அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். பாகிஸ்தானின் பிரதமரின் உதவியாளராக இருந்துகொண்டு அவரது முகம் கூடவா தெரியாது என பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.