ADVERTISEMENT

ரொனால்டோ இடத்தை நிரப்புவீர்களா? - பிரான்ஸின் பாப்பே பதில்

01:45 PM Jul 16, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடந்துமுடிந்த உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனுக்கான இளம் வீரர் விருதினைப் பெற்றவர் பிரான்ஸ் அணியின் பாப்பே. அவரது அசத்தலான விளையாட்டின் மூலம் கவனம் பெற்ற சமயத்தில், உலகக்கோப்பை போட்டிகளின் மூலமாக தனக்குக் கிடைக்கும் வருமானம் முழுவதையும் ஆதரவற்றோர் நலனுக்காக வழங்குவதாக அறிவித்தார்.

இவர், தற்சமயம் பிரெஞ்சு லியூக்கின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது லா லிகாவின் ரியல் மேட்ரிட் அணியில் இருந்து வெளியேறிய போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜூவெண்டஸ் அணியில் சேருவதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இது ரியல் மேட்ரிட் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரொனால்டோவின் இடத்தை நிரப்ப பிரான்ஸின் பாப்பே மற்றும் பெல்ஜியம் நாட்டின் ஈடன் ஹஸ்ர்ட் ஆகிய இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல் குறித்து பாப்பே கூறியதாவது, நான் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியில் மீண்டும் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அந்த அணிக்காக விளையாடுவதே மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, இன்னொரு அணியில் சேருவதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.

பிரேசிலின் பீலோவுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பாப்பே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT