Skip to main content

"எனது கருத்து அஸ்வினை வருத்தப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சி" - ரவி சாஸ்திரி!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

RAVI SHASTRI

 

இந்திய அணி கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போது பேசிய இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாடுகளில் இந்திய அணி விளையாடும்போது, சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் முதல் தேர்வாக இருப்பார் என தெரிவித்தார்.

 

இந்தச் சூழலில் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், குல்தீப் யாதவ் முதல் தேர்வாக இருப்பார் என்ற கருத்தால் தான் நொறுங்கிப்போனதாக தெரிவித்தார். இந்நிலையில், தனது கருத்தால் அஸ்வின் வருத்தப்பட்டிருந்தால் அது தனக்கு மகிழ்ச்சியே என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக ரவி சாஸ்திரி கூறியுள்ளதாவது, “ஒரு பயிற்சியாளராக நான் உங்களுக்குச் சொல்கிறேன். அங்கு எனது வேலை அனைவரது ரொட்டிக்கும் வெண்ணெய் தடவுவது அல்ல. எனது வேலை என்னவென்றால், எந்த நோக்கமும் இல்லாமல், உண்மைகள் எப்படி இருக்கிறதோ அப்படியே  சொல்வதுதான். சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஷ்வின் விளையாடவில்லை. குல்தீப் விளையாடினார். அற்புதமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார்.

 

அவர் பந்துவீசிய விதத்தை வைத்து வெளிநாடுகளில் இந்தியாவின் நம்பர் 1 [சுழல்] பந்துவீச்சாளராக அவர் இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன என கூறினேன். அது வேறு ஒரு வீரரைக் காயப்படுத்தினால் நல்லது என்று கூறுவேன். திரும்பிப் பார்க்கையில், நான் அந்தக் கருத்தைக் கூறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரை காயப்படுத்தி, இதனால் அவர் வருத்தப்பட்டதால் அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஒரு வீரர் தனக்குள்ளே, ‘நான் யாரென்று இந்தப் பயிற்சியாளருக்கு காட்டப் போகிறேன், அவருக்குப் பாடம் கற்பிக்கப் போகிறேன், நான் என்ன செய்கிறேன் என்பதை அவருக்குக் காட்டப் போகிறேன்’ என நினைக்க வேண்டும் என விரும்பும் பயிற்சியாளர் நான்.

 

எனவே எனது கருத்து அவரை வருத்தப்படுத்தியிருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அது அவரை வித்தியாசமாக ஏதாவது செய்ய வைத்திருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2019இல் அவர் ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய விதம் சுண்ணாம்பு போன்றது. 2021இல் அவர் ஆஸ்திரேலியாவில் பந்து வீசியது வெண்ணெய் போன்றது. நான் எந்த நாளிலும்  வெண்ணெய்யைத்தான் தேர்ந்தெடுப்பேன்.” இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

கிரிக்கெட் வீரர் பின்னணி குரலில் வெளியான ஜி.வி பிரகாஷ் பட ட்ரைலர்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
ravichandran ashwin gives voice over to gv prakash aishwarya rajesh dear movie trailer

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்பு கள்வன் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு வைரமுத்து, வசந்தபாலன், ஆர்யா உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  

இப்படி தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் டியர் படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ஆனந்த ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி, பிரித்விராஜ் என மூன்று பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷே இசையமைத்துள்ளார். 

ravichandran ashwin gives voice over to gv prakash aishwarya rajesh dear movie trailer

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் பிண்ணி குரல் கொடுத்துள்ளார். ஜி.வி பிரகாஷுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் அதிக அளவு குறட்டை விடும் நபராக இருக்கிறார். அதனால் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி காமெடி கலந்த ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது போல் அமைந்துள்ளது. இப்படம் வருகிற 11ஆம் தேதி திரைக்கு வருகிறது. ட்ரைலர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதே குறட்டை பிரச்சனையை மையப்படுத்தி மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு குட் நைட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.