பிரேசில் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ilavenil valarivan won gold in issf world championship

Advertisment

Advertisment

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இந்த தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பையிலும் இவர் இந்தியா சார்பாக தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சீனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு உலகக்கோப்பையில் தங்கம் வெல்லும் மூன்றாவது இந்தியரும் இவர்தான். 20 வயதான இளவேனில் பிரிட்டன் மற்றும் சீன வீராங்கனைகளை தோற்கடித்து இந்த தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.