Skip to main content

மீண்டும் தங்கம் வென்று இளவெனில் அசத்தல்....

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றுள்ளது, இது இரண்டாவது முறையாகும்.
 

ilavenil

 

 

முன்னதாக, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்று இளவேனில் தங்கம் வென்றார். 

20 வயதுப் பெண்ணான இளவேனில் வெற்றியைத் தமிழகமே கொண்டாடி வருகிறது. கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர். இளவேனிலுக்கு 3 வயதாக இருக்கும்போது, இளவேனிலின் குடும்பம் குஜராத் - அஹமதாபாத்துக்கு இடம்பெயர்ந்தது. இப்போதும் அங்குதான் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குண்டு பாய்ந்த சிறுவன் இறப்பு: போராட்ட எதிரொலியால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

Tasmac stores ordered to close due to people strike

 

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பசுமலைபட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து பயிற்சியின்போது கடந்த 30ஆம் தேதி எங்கிருந்தோ வந்த தோட்டா புகழேந்தி என்ற சிறுவன் தலையில் பாய்ந்தது. இதில் காயமடைந்த சிறுவன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். வீடு கட்டி கொடுக்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். உரிய விசாரணை செய்து துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

afasf

 

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்து ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சிறுவனது உடல் இன்று பிரேத பரிசோதனைக்குப் பிறகு சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குளத்தூர் தாலுகாவில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Next Story

வீட்டிலிருந்த சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு... விபரீதத்தில் முடிந்த துப்பாக்கி சுடும் பயிற்சி

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

Doctors fighting to rescue boy ... Public involved in road blockade

 

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அம்மாசத்திரம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இன்று பயிற்சி நடந்தது. அப்போது அங்கிருந்து வெளியேறிய துப்பாக்கிக் குண்டு, அருகே உள்ள வீட்டிலிருந்த புகழேந்தி (11) என்ற சிறுவன் தலையில் பாய்ந்தது. இதனையடுத்து, ஆபத்தான நிலையில் அச்சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

அங்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்துள்ள குண்டை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Doctors fighting to rescue boy ... Public involved in road blockade

 

மூளையில் குண்டடிபட்டுள்ளதால் மிகவும் சிரமத்துடன் போராடிவருகின்றனர். இந்த நிலையில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஜா பார்த்திபன் ஆய்வு செய்தார். தொடர்ந்து பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளார். சிறுவன் உயிரைக் காப்பாற்ற வேண்டும், பயிற்சி மையத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

 

சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் உள்ளிட்டோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மருத்துவக்குழுவுடன் சிறுவன் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தனர். மேலும் சிறுவன் உயிருக்கு ஆபத்தில்லை என்ற வார்த்தையைக் கேட்ட பிறகே செல்வோம் என்று கூறி அங்கேயே காத்திருக்கின்றனர்.