Advertisment

ஐசிசி வெளியிட்ட 2018 ன் சிறந்த அணி; ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்...

gthbgf

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த ஆண்டு ஜொலித்த வீரர்களை கொண்டு இந்த அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனியாக அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அணியிலும் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதன்படி டெஸ்ட், ஒருநாள் என இரண்டு பார்மெட்டுக்கும் இந்திய கேப்டன் கோலியே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஐசிசி அறிவித்துள்ள டெஸ்ட் அணியில் கோலி கேப்டனாகவும், ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராவும் இந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான அணியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, கோலி, பும்ரா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக ஒருநாள், டெஸ்ட் என இரு அணிகளிலும் இடம்பெற்ற வீரர்கள் என்ற பெருமையை இந்திய அணியின் கோலி மற்றும் பும்ரா ஆகியயோர் பெற்றுள்ளனர்.

Advertisment

virat kohli bcci ICC
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe