இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், 15-வது நாளான இன்று மாலை 03.00 நாட்டிங்காமில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும், அடுத்த ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது. உலக கோப்பை போட்டிகளில் விளையாடிய இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

ICC WORLD CUP 2019 TODAY 15 LEAGUE MATCH INDIA VS NEW ZEALAND AT ENGLAND

Advertisment

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் இடது கை பெருவிரலில் காயம் அடைந்தார். லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால், அவர் இந்த ஆட்டம் மட்டுமின்றி அடுத்த சில போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஷிகர் தவான் இல்லாததால் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், ரோகித் சர்மாவுடன் இணைந்து களம் இறங்குகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் ராகுல் ஆடிய 4-வது வரிசையில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவர் களம் இறங்கக்கூடும்.

ICC WORLD CUP 2019 TODAY 15 LEAGUE MATCH INDIA VS NEW ZEALAND AT ENGLAND

இருப்பினும் விஜய் சங்கர் ஆல்-ரவுண்டர் என்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சூசகமாக தெரிவித்துள்ளார். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து இந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெற வாய்ப்புள்ளது. அவர் சேர்க்கப்பட்டால் குல்தீப் யாதவுக்கு இடம் கிடைக்காது என்பது குறிப்பிடத்க்கது. இந்திய கேப்டன் விராட் கோலி சாதனையின் விளிம்பில் இருக்கிறார். அவர் இந்த ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெறுவார். மொத்தத்தில் இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக்காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ICC WORLD CUP 2019 TODAY 15 LEAGUE MATCH INDIA VS NEW ZEALAND AT ENGLAND

நாட்டிங்காமில் இந்த வாரம் முழுவதுமே பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆட்டம் குறைந்த ஓவர் கொண்டதாக மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் நாட்டிங்காமில் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாகவே தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பல ஆண்டுகளுக்கு பிறகு விளையாட உள்ளதால் இரு நாட்டு ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளன.