Skip to main content

'கிரிக்கெட் போட்டிகளில் இனி ஸ்மார்ட் பந்து' பட்டையை கிளப்பும் ஐசிசி!

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

கிரிக்கெட்டில் அடிக்கடி நடக்கும் சில சர்ச்சையான விக்கெட் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக ஐசிசி ஸ்மார்ட் பந்துகளை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த பந்து உள்ளே அதன் நடுப்பகுதியில் ஒரு சிப் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் மூலம் சில தீர்க்க முடியாத சர்ச்சைகளை தீர்க்க முடியும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த பந்துகள் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா நிறுவனம்தான் இந்த பந்துகளை வடிவமைக்க இருக்கிறது.
 

f



இந்த சிப்பின் மூலம் டிஆர்எஸ் முறையை விட துல்லியமாக எல்பிடபுள்யூ விக்கெட்கள், சர்ச்சைக்குரிய கேட்ச்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை சுழற்றும் விதம் ஆகியவற்றை எளிதாகக் கண்டுபிடிக்க இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிக்பாஷ் போட்டிகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டால் சர்வதேசப் போட்டிகளில் விரைவில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.