டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசிவெளியிட்டுள்ளது.
இதில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடத்தை இழந்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 2வது டெஸ்ட்டில் கோலி டக்அவுட் ஆனதால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 903 புள்ளிகளுடன் கோலி இரண்டாவது இடத்தில்இருக்கும் நிலையில் 904 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 878 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி வீரர் வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 825 புள்ளிகளுடன் இந்திய அணியின் புஜாரா இந்த பட்டியலில் 4 ஆவது இடம் பிடித்துள்ளார்.